Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2024 20:47:27 Hours

பங்களாதேஷில் நடைபெற்ற பிராந்திய கருத்தரங்கில் கேணல் எம்.பி.பி.என் ஹேரத் அவர்கள் உரை

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பதில் பணிப்பாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளருமான கேணல் எம்.பி.பி.என் ஹேரத் ஆர்எஸ்பீ அவர்கள் "தெற்காசிய தொழிலாளர் புலம்பெயர்வு பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்" என்ற தலைப்பில் 23 ஏப்ரல் 2024 அன்று பங்களாதேஷ் பிராந்திய கருத்தரங்கில் உரையாற்றினார்.

தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு மற்றும் அரசியல் உரையாடல் குறித்த ஆசிய நிகழ்ச்சித் திட்டமான கொன்ராட் அடினாவர் ஸ்டிப்டுங் (KAS) ஆகியவற்றுடன் இணைந்து பங்களாதேஷின் சர்வதேச மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் இம்மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்தரங்கின் போது, பிரதமரின் பொருளாதார விவகார ஆலோசகர் கலாநிதி மஷியுர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில், தெற்காசியப் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு மற்றும் பிறநாடுகளுடன் இணைந்து நட்புடன் பணியாற்றுவதற்காக பங்களாதேஷ் ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கருத்தரங்கில் உரையாற்றிய கேணல் எம்.பி.பி.என் ஹேரத் ஆர்எஸ்பீ அவர்கள் தெற்காசியாவில் தொழிலாளர் இடம்பெயர்வின் போது இலங்கையில் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

பல்வேறு அமைச்சிகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இராஜதந்திரிகள், சிரேஷ்ட சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.