26th April 2024 09:10:23 Hours
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யூபீ.ஆர்எஸ்பீ அவர்கள் 34 வருட குறிப்பிடத்தக்க பணியின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ.ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில் 25 ஏப்ரல் 2024, அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தளபதி காரியாலயத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் அர்ப்பணிப்பான சேவை மற்றும் பல்வேறு சவால்கள் நிறைந்த பொறுப்புகளை தவறாது அர்ப்பணிப்புடன் செய்தமைக்கு தனது பாராட்டினை தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது சிரேஷ்ட அதிகாரியின் விலைமதிப்பற்ற பங்களிப்பையும், போருக்குப் பிந்தைய காலத்தில், குறிப்பாக விசேட படையணியின் உறுப்பினராக அவர் தொடர்ந்து கடமையாற்றியதையும் இராணுவத் தளபதி குறிப்பாக எடுத்துரைத்தார்.
பதிலுக்கு, மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து தனக்குக் கிடைத்த வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கை அங்கீகரித்து, அவரது சேவையின் போது செய்த தியாகங்களைப் எடுத்துரைத்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு மற்றும் பாராட்டுச் சின்னமாக அவரது குடும்ப உறுப்பினர்களுக்குப் பரிசுகளுடன் விசேட நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் இங்கே:
மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ.கே. எரியகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ 1989 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர பாடநெறி இல - 32, இன் பயிலிளவல் அதிகாரி இணைந்துக் கொண்டார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததன் பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன்ட் ஆக 19 ஜனவரி 1991 அன்று கெமுனு ஹேவா படையணியில் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரி 01 பெப்ரவரி 1991 அன்று சிறப்புப் படையணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்ட பின்னர், அவர் மேஜர் ஜெனரல் நிலைக்கு 03 ஓகஸ்ட் 2022. அன்று நிலை உயர்த்தப்பட்டார். சிரேஸ்ட அதிகாரி 55 வயதில் 01 மே 2024 முதல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் ஓய்வு பெறுகின்றார். அவர் ஓய்வுபெறும் போது, 58 வது காலாட் படைபிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
6 வது கெமுனு ஹேவா படையணி அணித் தலைவர், முதலாம் விஷேட படையணி குழு தலைவர் , 2ம் விஷேட படையணி யின் அதிகாரி கட்டளை, 3ம் விஷேட படையணியின் நீண்ட தூர ரோந்து படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி ஈ குழுவின் தந்திரோபாய தலைமையகத்தின் செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர், 22 வது காலாட் படை பிரிவு, 3வது விஷேட படையணி படைப்பிரிவின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி அதிகாரி, 3வது விஷேட படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, விஷேட படையணி பயிற்சிப் பாடசாலையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், 3வது விஷேட படையணி பதில் கட்டளை அதிகாரி, 5வது விஷேட படையணி கட்டளை அதிகாரி மற்றும் விஷேட படையணி தலைமையகப் படையலகு கட்டளை அதிகாரி, விஷேட படையணி வன போர் பயிற்சி பாடசாலை மற்றும் விஷேட படையணி பயிற்சிப் பாடசாலை தளபதி, 53 வது காலாட் படைப்பிரிவு கேணல் பொதுப் பணி, எயார் மொபைல் பிரிகேட் பதில் தளபதி, விஷேட படையணி தலைமையக நிலையத் தளபதி, படைகள், கொழும்பு இராணுவத் தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர், 21 காலாட் படைப்பிரிவின் பதில் தளபதி, , 64 காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
போர்க்களத்தில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ரன விக்கிரம பதக்கம் (3 முறை) மற்றும் ரன சூர பதக்கம் (இரண்டு முறை) வழங்கப்பட்டது.
விஷேட படையணி அடிப்படைப் பாடநெறி, அடிப்படை நுண்ணறிவு பாடநெறி, படையணி சமிஞ்சை அதிகாரி பாடநெறி, படையலகு கணக்கீட்டுஅதிகாரி பாடநெறி, சமனிலை முறைமை பாடநெறி, வான்வழி அடிப்படை பாடநெறி (இந்தியா), கொமண்டோ பாடநெறி (இந்தியா), இளம் அதிகாரிகள் பாடநெறி (பங்கானதேஷ்), இடைநிலை தொழிலாண்மை பாடநெறி (பாகிஸ்தான்), கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வன போர் பாடநெறி (இந்தியா) விஷேட ஆயுத பாடநெறி (இந்தியா), ஐக்கிய நாடுகளின் கட்டளை அதிகாரிகளின் பாடநெறி (நோர்வே) மற்றும் சிரேஸ்ட கட்டளைப் பாடநெறி (இந்தியா) உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாடநெறிகளை கற்றுள்ளார்.
சிரேஸ்ட அதிகாரி, இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் அமைதி மற்றும் மோதல் தீர்வுக்கான சான்றிதழ் பாடநெறி மற்றும் இந்தியாவின் தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் சிரேஸ்ட நிலை பாதுகாப்பு முகாமைத்துவத்தில் டிப்ளோமா போன்ற பல இராணுவம் அல்லாத உயர் கல்வி கற்கைகளையும் கற்றுள்ளார்.