19th April 2024 13:03:22 Hours
இராணுவத் தலைமையகத்தின் படையணி சாஜன் மேஜராக வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நியமிக்கப்பட்ட அதிகாரவணையற்ற அதிகாரி 1 எச்.எம்.பீ.ஏ ஹேரத் யூஎஸ்பீ அவர்கள், இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களிடமிருந்து நடைபெற்ற புத்தாண்டு தேநீர் விருந்துபசாரத்தின் போது தனது அடையாள கோதை பெற்றுக்கொண்டார்.
இராணுவ பதவிநிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இராணுவ பிரதி பதவிநிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐஎம்.பிசமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, இராணுவத் தலைமையகத்தின் பிரதம பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். .
இராணுவத் தலைமையகத்தின் படையணி சாஜன் மேஜர் என்பவர் இராணுவத்தில் ஒரு அதிகாரவாணையற்ற அதிகாரி அடையக்கூடிய மிக உயர்ந்த நியமனம் ஆகும். மேலும் அவர் அமைப்பின் சிறந்த அதிகாரவாணையற்ற அதிகாரியாகக் கருதப்படுகின்றார்.
அதிகாரவணையற்ற அதிகாரி 1 எச்.எம்.பீ.ஏ ஹேரத் யூஎஸ்பீ அவர்கள், 2004 செப்டெம்பர் 01 ஆம் திகதி இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணியில் இணைந்து இராணுவத்தில் 19 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றியுள்ளார். அவர் 2024 ஏப்ரல் 02 அன்று இராணுவத் தலைமையகத்தின் படையணி சாஜன் மேஜராக நியமிக்கப்பட்டார்.