18th April 2024 20:30:34 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான, மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 2024 ஏப்ரல் 17 ஆம் திகதி 35 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதியின் அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் அர்ப்பணிப்பான சேவை மற்றும் பல்வேறு சவால்கள் நிறைந்த பொறுப்புகள் தவறாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவைக்கு தனது பாராட்டினை தெரிவித்துக்கொண்டார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதியின் போது ஓய்வு பெற்றுபவரின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் பாத்திரங்களை அவர் நினைவு கூர்ந்தார், அத்துடன் போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் அவர் தனது கடமைகளை திறம்பட நிறைவேற்றினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
பதிலுக்கு, மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், பல்வேறு கடமைகளைச் செய்வதற்கு அவருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இராணுவத் தளபதி, நாட்டை பாதுகாக்கும் அவரது பணிக்காலம் முழுவதிலும், குறிப்பாக சவாலான காலகட்டங்களில், சிரேஷ்ட அதிகாரிக்கு குடும்பத்தினர் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் பாராட்டினார்.
சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்திற்கு விசேட பரிசையும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விபரம்
மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் 1989 பெப்ரவரி 17 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி, தியத்தலாவ மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 31 ஊடாக இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் அவர் 05 ஒக்டோபர் 1990 இல் இரண்டாம் லெப்டினன்னாக இலங்கை பீரங்கிப் படையணியில் நியமிக்கப்பட்டார். அவரது வாழ்க்கை முழுவதும், அவர் பல்வேறு நியமனங்களை வகித்ததுடன் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் இறுதியில் 17 மே 2022 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்தப்பட்டார்.
அவர் ஓய்வுபெறும் போது இவர் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியாகவும் கிழக்குப் பாதுகாப்பு படை தலைமையக தளபதியகவும் பதவி வகித்தார். அவர் 7 வது இலங்கை பீரங்கி படையணியின் படை கட்டளையாளர், பீரங்கி பிரிகேட்டின் பணி நிலை அதிகாரி 3 (வழங்கல்), 7 வது இலங்கை பீரங்கி படையணியின் பெட்டரி கட்டளையாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி பயிற்சி பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், 223 வது காலாட் பிரிகேட் மேஜர், 9 வது இலங்கை பீரங்கி படையணியின் பெட்டரி தளபதி, 21 வது காலாட் படைப்பிரிவின் பொது பணி 2 (பயிற்சி), 9 வது இலங்கை பீரங்கி படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி , கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பொது பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 11 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி, 11 வது காலாட் படைபிரிவின் கேணல் பொது பணி 1 (செயல்பாடுகள்), அதிகாரி தொழிலாண்மை மேம்பாட்டு நிலையத்தின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், 11 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (பொது பணி), பீரங்கி பாடசாலையின் தளபதி, 623 வது காலாட் பிரிகேட்டின் தளபதி, இலங்கை பீரங்கி படையணியின் நிலைய தளபதி மற்றும் பிரதி நிலைய தளபதி, யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் (பொது பணி) - மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி போன்ற நியமனங்களையும் அவர் வகித்துள்ளார்.
போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண சுர பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது.
பீரங்கி இளம் அதிகாரிகள் பாடநெறி, அணி கட்டளையாளர் தந்திரோபாய பாடநெறி, அதிகாரிகள் செயற்பாட்டு கடமைகள் பாடநெறி, கனிஸ்ட பணிநிலைப் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, பீரங்கி இளம் அதிகாரிகள் பாடநெறி,உயர் பீரங்கி பாடநெறி – இந்தியா, அதிகாரிகள் பீரங்கி பணிநிலை பாடநெறி – பாகிஸ்தான், பீரங்கி படையலகு பாடநெறி – சீனா, தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் - சீனா.போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு படிப்புகளை அவர் தனது இராணுவ வாழ்க்கையில் முடித்துள்ளார்.
சிரேஸ்ட அதிகாரி, இலங்கை கண் இயக்கம் தேய்மானம் மற்றும் மறுசெயலாக்குதல் (EMDR) சங்கத்தில் கண் இயக்கம் மற்றும் சிகிச்சை பயிற்சி, இலங்கை அறக்கட்டளையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உளவியல் உதவி, இலங்கை அறக்கட்டளையில் ஆலோசனைக்கான உயர் தேசிய டிப்ளோமா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆலோசனை மற்றும் உளவியல் உதவியில் முதுநிலை. ஆலோசனைக்கான தேசிய டிப்ளோமா, வழிகாட்டலில் முதுகலை டிப்ளோமா போன்ற பல இராணுவம் அல்லாத உயர் படிப்புகளையும் கற்றுள்ளார்.