Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2024 13:07:05 Hours

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் புத்தாண்டு கொண்டாட்டம்

அம்பாறை போர் பயிற்சி பாடசாலை சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து 06 ஏப்ரல் 2024 அன்று பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளித்து அம்பாறை போர் பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பாரம்பரிய விளக்கை ஏற்றியதைத் தொடர்ந்து விழா ஆரம்பமானது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பிள்ளைகள் புத்தாண்டு மரபுகள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் தொடர்புடைய வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிகழ்வுகளை கொண்டாடினர்.