Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd March 2024 14:19:34 Hours

கேணல் எம்.பி.பி.என் ஹேரத் ஆர்எஸ்பீ அவர்கள் இந்திய 3வது பாதுகாப்பு மற்றும் மூலோபாய சந்திப்பில் உரை

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் திணைக்களம் மற்றும் மேம்படுத்துதல் மூலோபாய ஆய்வுகளுக்கான மையம் ஆகியவற்றுடன் இணைந்து சீனா பகுப்பாய்வு மற்றும் வியூகத்திற்கான நிலையத்தில் ஏற்பாடு செய்த 3வது பாதுகாப்பு மற்றும் மூலோபாய கலந்துரையாடல் இந்தியாவின் புனே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் சாந்த் தியானேஷ்வர் மண்டபத்தில் மார்ச் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும் இலங்கையில் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் செயற்பாட்டு (ஆராய்ச்சி) பதில் பணிப்பாளர் நாயகமுமான கேணல் எம்.பி.பி.என் ஹேரத் ஆர்எஸ்பீ அவர்கள் அங்கு விரிவுரை ஆற்றினார். கேர்ணல் ஹேரத் உரையாற்றுகையில், பிராந்திய பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் இயக்கவியல் தொடர்பான இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை இலங்கை அறிந்துள்ளதாக தெரிவித் அவர் மேலும், வழிசெலுத்துவதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அதே வேளையில், உலகளாவிய அதிகாரப் போட்டிகளுக்கு இலங்கை பக்கபலமாக இருக்காது, அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையை தொடர்வதில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு குறித்து அவர் வலியுறுத்தினார்.

கருத்தரங்கை இந்திய பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் அனில் சவுகான் தொடங்கி வைத்தார். புகழ்பெற்ற பேச்சாளர்கள் குழு இரண்டு நாள் அமர்வுகளில் பல்வேறு தலைப்புகளில் தங்கள் அறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.