Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2024 18:31:34 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் கர்ப்பிணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நன்கொடை

இராணுவத் தலைமையகத்தின் இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் 18 மார்ச் 2024 ம் திகதி இராணுவத்தில் பணியாற்றும் 100 கர்ப்பிணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். பிரதம அதிதிகளை வீராங்கனைகள் தாம்புலம் வழங்கி மரியாதையுடன் வரவேற்றதுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகின. கர்ப்பிணிப் வீராங்கனைகளின் அன்றாடத் தேவைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்கான அத்தியாவசிய ஊட்டச்சத்து பொதிகளை விநியோகித்தனர்.

விநியோகத்தைத் தொடர்ந்து, கர்ப்பிணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு சிறப்பு மற்றும் சத்தான மதிய உணவு வழங்கப்பட்டது. இது அவர்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்திற்கான இராணுவத்தின் அர்ப்பணிப்பாகும்.

இந் நிகழ்வு இராணுவத் தளபதியின் தந்தை வழிக் கவனிப்பு மற்றும் சேவைப் பெண்களின் நலனுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. இராணுவ வீரர்களின் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் இராணுவ சேவை வனிதையர் பிரிவினரின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது.

அன்றைய நிகழ்ச்சியின் முடிவில், நிகழ்ச்சியின் நினைவுச்சின்னமாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி படையினருடன் குழு படம் எடுத்து கொண்டார்.

இந் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.