18th March 2024 13:52:26 Hours
கொழும்பு இராணுவ மருத்துவமனையில் ‘ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்’ எனும் திட்டத்தின் கீழ் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி மாணவ அதிகாரிகளுக்கு தொற்று அல்லாத நோய்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 16 மார்ச் 2024 அன்று கல்லூரி வளாகத்தில் பிரிகேடியர் ஏ.எஸ்.எம் விஜேவர்தன யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
பிரிகேடியர் ஏ.எஸ்.எம் விஜேவர்தன யூஎஸ்பீ அவர்களால் நீண்ட ஆயுளுக்கான இரகசியங்கள் தொடர்பான விரிவுரையுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கெப்டன் ஏ.எம் தெல்வத்த அவர்களால் நடத்தப்பட்ட மன அழுத்த முகாமைத்துவம் தொடர்பான அமர்வுகள், மேஜர் ஏ.சி.கே உடுகம, அவர்களால் வழங்கப்பட்ட ஆரோக்கியமான உணவு மற்றும் பிராவே கேணல் பிஎல் ரனசிங்க அவர்களால் பயிற்சிகளின் நன்மைகள் தொடர்பாக விரிவுரை வழங்கப்பட்டது.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எம்.எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.