17th March 2024 13:20:09 Hours
10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 14 மார்ச் 2024 அன்று பாலிநகர் பகுதியில் உள்ள பார்வை குறைபாடு உள்ளோருக்கு உதவும் நோக்கில் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தனர்.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக 275 பார்வை குறைபாடு உள்ளோருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், இரண்டாம் கட்டமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டு தேவைப்பட்டவர்களுக்கு சத்திரசிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மருத்துவ முகாமில் பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.
56 வது காலாட் படைப்ப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைப்பின் செயலாளர் கலாநிதி சர்வேஸ்வரனின் தாராளமான பங்களிப்புடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் கேஏகே ஹெவாபதகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இந் நிகழ்வுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், உதவி புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைப்பின் பணியாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.
இதற்கிடையில், மருத்துவ முகாமின் இரண்டாம் கட்டம் 16 மார்ச் 2024 அன்று இடம்பெற்றது, நிகழ்வின் போது 287 நோயாளிகள் பயனடைந்தனர். நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.