Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th March 2024 08:37:00 Hours

இராணுவத் தளபதி கட்டளை அதிகாரிகளுக்கு உரை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 06 மார்ச் 2024 ம் திகதியன்று இராணுவத் தலைமையகத்தின் பல்லூடக மண்டபத்தில் இருந்து அனைத்து படையலகுகளின் கட்டளை அதிகாரிகளுக்கு உரையாற்றினார். நேரடியாக கலந்து கொள்ள முடியாத கட்டளை அதிகாரிகள் இணைய தளம் மூலம் பங்குபற்றினர்.

தளபதி அவர்கள் தனது உரையில், தரை மட்டத் தளபதிகளாக அவர்கள் ஆற்றிய முக்கிய கடமைகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவைக்கு நன்றி தெரிவித்தார்.

தளபதியால் வலியுறுத்தப்பட்ட உத்தரவுகளில் ஒன்றாக, அவர்களின் கட்டளையின் கீழ் உள்ள வீரர்களின் நலனை உறுதி செய்வது மிக முக்கியமானதாகும். படையினரின் நலன் தேவைகள் மற்றும் உளவியல் ஆதரவு ஆகிய இரண்டிலும் நல்வாழ்வை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை தளபதி எடுத்துரைத்தார்.

அத்துடன் தளபதி, படையினர் மத்தியில் ஒழுக்கத்தை பேணுவது தொடர்பாக தெளிவான அறிவுறுத்தளை வழங்கினார், நடத்தை மற்றும் ஒருமைப்பாட்டின் உயர்ந்த தரத்தை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.இராணுவத்தின் நற்பெயரையும் கௌரவத்தையும் பாதுகாப்பதன் மூலம் படையினர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதில் விழிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

வளர்ந்து வரும் சவால்களின் ஊடாக இராணுவம் தொடர்ந்து பயணிக்கும்போது, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய வழிகாட்டுதல் இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்களும் பகிர்ந்து கொள்ளும் கூட்டுப் பொறுப்பை நினைவூட்டுவதாக அமைகிறது.