Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2024 13:30:05 Hours

விஷேட படையணி சேவை வனிதையரினால் வல்மொறுவ ஆரம்ப பாடசாலைக்கு நன்கொடை

விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவினால் 29 பெப்ரவரி 2024 அன்று பல்லேபொல வல்மொறுவ ஆரம்பப் பாடசாலைக்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டது.விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் கல்விக்கு உதவும் நோக்கில் பாடசாலைப் பைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களை மகிழ்விக்கும் முகமாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் விஷேட படையணியின் நிலைய தளபதி கேணல் எச்எஸ்டப்ளியூகே கல்ஹெனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.