04th March 2024 13:33:02 Hours
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 20 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் கதிர்காமம் கோதமிகம பிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணிக்கும் பணியை 2024 மார்ச் 01 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த பாராட்டத்தக்க முயற்சியின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் படைப்பிரிவின் தளபதி அடிக்கல்லை நாட்டினார். மூன்று பிள்ளைகளுடன் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இக்குடும்பத்திற்கு தற்போது போதிய தங்குமிடம் இல்லை என்பதை கருத்திற்கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்த, 20 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனித வள ஆதரவை வழங்குகின்றனர். அதற்கமைய கொழும்பைச் சேர்ந்த அனுசரனையாளர் இந்த கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந் நிகழ்வில் 121 வது காலாட் பிரிகேட் தளபதி, 20 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.