Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2024 16:16:41 Hours

9 வது விஜயபாகு படையணியினால் மாஹவலிகம ஆரம்ப பாடசாலை பிள்ளைகளுக்கு ‘சிசுஉதான’ சேமிப்பு கணக்கு மற்றும் பாடசாலை பைகள்

9 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் சிடிபீ ஜயதிலக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் ஓருங்கிணைப்பின் கீழ் படையினர் 2024 பெப்ரவரி 22 அன்று திருகோணமலை, மகாவெலிகம ஆரம்பப் பாடசாலையில் 90 மாணவர்களுக்கு 'சிசுஉதான' சேமிப்புக் கணக்குகள் மற்றும் பாடசாலைப் பைகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

திருகோணமலை மக்கள் வங்கி இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 222 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஜே.பி.என்.பி ஜயசூரிய யூஎஸ்பீ அவர்கள் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், திருகோணமலை மக்கள் வங்கியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.