28th February 2024 16:14:01 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2 வது (தொ) கஜபா படையணி 25 பெப்ரவரி 2024 அன்று திருகோணமலையில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்காக புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு அடிக்கல் நாட்டி பணியை ஆரம்பித்தனர்.
இந்த திட்டம் நன்கொடையாளரான திரு. குணசேகராவின் நிதியுதவியுடன் 2 வது (தொ) கஜபா படையணி படையினரின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டுமான பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.