Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th April 2023 18:03:02 Hours

‘மிஹிந்து செத் மெதுரா’வில் புத்தாண்டு கொண்டாட்டம்

யுத்தத்தின் போது நிரந்தரமாக காயமடைந்த போர் வீரர்கள் வசிக்கும் அத்திட்டிய 'மிஹிந்து செத் மெதுர'வில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு நிகழ்வு திங்கட்கிழமை (24) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தலைமையல் இடம் பெற்றது.

அத்துடன், இராணுவ வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பிஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, போர் கருவிகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்ஆர்டபிள்யூடபிள்யூஜேபி வனிகசேகர யூஎஸ்பீ மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜீடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஆகியோரும் கலந்து கொண்டு அந்த போர்வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

மிஹிந்து செத் மெதுராவின் வழக்கமான சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் தலையணை சண்டை, பானை உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், இசை நாற்காலிகள், பலூன் உடைத்தல், தேசிக்காய் சமநிலை ஓட்டம், தயிர் ஊட்டுதல், உள்ளிட்ட சுவாரஸ்யமான அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. மே 2009 க்கு முன்னர் தாய்நாட்டின் போருக்கு எதிராக தங்கள் அவயங்களை தியாகம் செய்த பல்வேறு திறன் கொண்ட போர்வீரர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.

பிரதம அதிதியின் வருகையை தொடர்ந்து, மிஹிந்து செத் மெதுர நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக அவரை வரவேற்றதுடன், அத்திட்டிய மிஹிந்து செத் மெதுராவின் தளபதி பிரிகேடியர் டி.எஸ் பாலசூரிய அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வரவேற்றார்.

ஆரம்பத்தில், இராணுவத் தளபதி அவர்கள் அதிகாரிகள் மற்றும் ஏனைய படைவீரர்களுடன் மிஹிந்து செத் மெதுரவில் உள்ள விடுதிகளுக்குச் சென்று, அங்கு வசிக்கும் போர்வீரர்களின் நலம் விசாரித்து அவர்களுடன் சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டார். அதேநேரம், புத்தாண்டு வாழ்த்துச் சின்னமாக அந்த போர்வீரர்களுக்கு சிறப்பு பரிசுப் பொதிகளையும் வழங்கினார்.

அன்றைய பிரதம அதிதி மற்றும் அழைப்பாளர்களால் பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானதுடன் புத்தாண்டின் நிகழ்வை குறிக்கும் வகையில் நடனக் காட்சிகளும் இடம்பெற்றன.

அந்த மாற்றுதிறன் திறன் கொண்ட போர்வீரர்கள் இராணுவத் தளபதியின் முன்னிலையில் தங்கள் நாளை மறக்கமுடியாததாக மாற்ற ஒருவரோடு ஒருவர் இணைந்ததால், பண்டிகை பொழுதுபோக்காகவும், மிக சிறப்பாகவும் மிகவும் சுவாரஸ்யமாகவும் காணப்பட்டன.

அன்றைய சம்பிரதாய நிகழ்வில் முடிவில், பிரதம அதிதி பல்வேறு புத்தாண்டு விளையாட்டுக்கள் மற்றும் கூட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகைகள் மற்றும் புத்தாண்டு பரிசுகளை வழங்கியதுடன் அவர்களின் பல்வேறு திறன்களைப் பாராட்டினார். அன்றைய பார்வையாளர்கள் காயமடைந்த அனைத்து போர் வீரர்களுடன் பாரம்பரிய தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டனர்.

இராணுவத் தளபதி புறப்படுவதற்கு முன் மிஹிந்து செத் மெதுர விருந்தினர் புத்தகத்தில் சில புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவிட்டு சென்றார்.