Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2023 20:21:43 Hours

‘தம்சோ சதுரங்க போட்டியில் அரச பிரிவில் இராணுவ செஸ் வீரர்கள் சாம்பியன்

இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் வீரர்கள் கலந்து கொண்ட ஆறு நாள் 10 வது தம்சோ சர்வதேச சதுரங்க போட்டி- 2023’க்கான பரிசளிப்பு நிகழ்வு மே 27 முதல் 30 வரை ஹிக்கடுவை லவங்க உல்லாச விடுதி மற்றும் ஸ்பாவில் நடைபெற்றது.

இலங்கை இராணுவ அணி அரசு மற்றும் வணிக அணி பிரிவு சம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை கடற்படை ‘பி’ மற்றும் இலங்கை கடற்படை ‘ஏ’ அணிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இரண்டங்களை பெற்றனர்.

10வது தம்சோ சர்வதேச சதுரங்க விழா 2023 ஆண்டுதோறும் அம்பலாங்கொடை தர்மசோக கல்லூரியின் பழைய மாணவர்களின் சதுரங்க சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. தம்சோ சர்வதேச சதுரங்க போட்டி 2023 இலங்கை சதுரங்க சம்மேளனம், ஆசிய சதுரங்க சம்மேளனம் மற்றும் உலக சதுரங்க கூட்டமைப்பு ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.