19th December 2023 22:21:25 Hours
இலங்கை ஓட்டுனர் மற்றும் சாரதிகள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யபட்ட 'கட்டுகுருந்த வலய மட்ட போட்டி - 2023' இன் மோட்டார் பந்தய போட்டி டிசம்பர் 12, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் முப்படைகளின் போட்டியாளர்கள் உட்பட நாடளாவிய ரீதியிலான போட்டியாளர்களின் பங்கேற்புடன் கட்டுகுருந்த விமானப்படை பந்தயப் பாதையில் நடைபெற்றது.
இப் போட்டியில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் கோப்ரல் பிஐ மதுரங்க, 'ஸ்போர்ட்ஸ் டூரிங் 600 சீசீ நிகழ்வு' மற்றும் எஸ்சஎம் சுப்பர் மோட்டார் 250/450 சீசீ திறந்த நிகழ்வில்' முறையே முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றார்.