15th April 2023 19:24:50 Hours
2023 ஏப்ரல் 10 தொடக்கம் 11 வரை, நுவரெலியா ஹில் க்ளைம்ப் மோட்டார் வீதியில் நடைபெற்ற 'ஒற்றை மர மலை ஏறுதல் - 2023', போட்டியில் இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவின் பங்கேற்பாளர்கள், நாடளாவிய ரீதியில் பங்குபற்றிய பலரை வீழ்த்தி பல கிண்ணங்களை வென்றுள்ளனர், மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்கள் பின்வறுமாறு.
எஸ்எம் – சுப்பர் மோட்டர் 250/450 சீசீ திறந்த போட்டி மற்றும் ஸ்போர்ட் டூரிங் 600 சீசீ திறந்த போட்டியில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கோப்ரல் பிஐ மதுரங்க முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றுக்கொண்டார்.
மேக் போர்ட் லேசர்/மெஸ்டா 1300 சீசீ வரையிலான என் குரூப் கார்களில் இரண்டாம் இடத்தை இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் யூகேஜேஏ குமார வென்றார்.
எஸ்எம் – சுப்பர் மோட்டர் 250/450 சீசீ திறந்த போட்டியில் கஜபா படையணியின் சிப்பாய் எல்பிடி செனவிரத்ன மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவின் தலைவர் ஓட்டுனர்களுக்கு தேவையான வசதிகள், வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்தை வழங்கினார்.