Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2023 20:00:45 Hours

‘எலியகந்த ஸ்பீட் ஹில் க்ளைம்ப் -2023’ இல் இராணுவ வீரர்கள் வெற்றி

மாத்தறை எலியகந்த மோட்டார் பாதையில் வார இறுதியில் (பெப்ரவரி 18-19) நடைபெற்ற 27வது 'எலியகந்த ஸ்பீட் ஹில் க்ளைம்ப் - 2023' இல் இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவின் பங்கேற்பாளர்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தந்த பல நூற்றுக்கணக்கான வீரர்களை முறியடித்து பல கிண்ணங்களை வென்றெடுத்தனர்.

பின்வரும் நான்கு நிகழ்வுகளில் பின்வரும் மோட்டார் ஓட்டுனர்கள் வெற்றி பெற்றனர்.

125 சீ.சீ முதல் 250 சீ.சீ வரையிலான ஸ்பீட் டிரெயில் பைக் திறந்த நிகழ்வில் மூன்றாவது இடத்தைப் பொறியியல் சேவை படையணியின் கோப்ரல் ஜே.எம்.எஸ்.ஜெயலத் பெற்றார்.

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கோப்ரல் பி.ஐ மதுரங்க எஸ்எம் – சுப்பர் மோட்டார் 250/450 சீ.சீ திறந்த போட்டியில் முதலாவது இடத்தை வென்றார், மேலும் விளையாட்டு சுற்றுலா 600 சீ.சீ திறந்த பேட்டியில் மூன்றாவது இடத்தையும் பெற்றார்.

எஸ்எம் – சுப்பர் மோட்டார் 250/450 சீ.சீ திறந்த போட்டியில் கஜபா படையணியின் சிப்பாய் எல்.பீ.டி செனவிரத்ன நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்கள் போட்டியாளர்களுக்கு தேவையான வசதிகள், வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்தை வழங்கினார்.