Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2023 18:13:26 Hours

‘அடிப்படை அவுட்போர்ட் மோட்டார் படகு’ பாடநெறி - 2 இன் விருது வழங்கும் நிகழ்வு

22 வது காலாட் படைப்பிரிவின் தலைமையக வளாகத்தில் 'அடிப்படை அவுட்போர்ட் மோட்டார் படகுப் பயிற்சி நவம்பர் 27 முதல் டிசம்பர் 9 வரை அதன் கட்டளையலகுகளின் படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

7 வது இலங்கை பொறியியல் படையணியின் தகுதி வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களால் இந்த பாடநெறி நடத்தப்பட்டது. இப்பாடநெறியில் 34 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

'அடிப்படை அவுட்போர்ட் மோட்டார் படகு பயிற்சியில் இயக்குதல், இயந்திரத்தின் பாகங்களை அடையாளம் காண்பது, செயல்பாட்டின் போது ஏற்படும் குறைபாடுகள் மற்றும் இன்ஜின் தவறுகளை சரிசெய்தல் மற்றும் வெள்ளம் அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகள் தொடர்பான அவசர நடவடிக்கைகள் குறித்து படையினருக்கு கோட்பாட்டு மற்றும் நடைமுறை அமர்வுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

34 பங்கேற்பாளர்களில் 9 வது விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் டிபிடியுகே விக்கிரமசிறி முதலாம் இடத்தை பெற்றுள்ளார். சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2023 டிசம்பர் 10 ஆம் திகதி 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் தலமையில் இடம்பெற்றது.