06th June 2023 17:44:52 Hours
2023 பொசன் பண்டிகையை முன்னிட்டு, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் இலங்கை இராணுவ பௌத்த சங்கத்துடன் இணைந்து போதிராஜாராமயவில் 'சவனக் ரெஸ்' எனும் தொனிப்பொருளில் 'சீல சமாதி' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டது. பொசன் போயா தினமான (ஜூன் 03) பனாகொடவில் உள்ள இராணுவ விகாரையினால் பத்தரமுல்லையில் உள்ள சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்புடன் (ITN) இணைந்து இந் நிகழ்வை முன்னெடுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் உயிர் நீத்த போர்வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினர், சேவையாற்றும் இராணுவத்தினர், சிவில் ஊழியர்கள் மற்றும் அனைத்து குடும்ப அங்கத்தவர்களுக்கும் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன. வணக்கத்திற்குரிய ஹொரவல தம்மஜோதி நாயக்க தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய தொடம்பே சத்தவிமல தேரர் ஆகியோரின் சொற்பொழிவுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது. பூஜை, தியானப் பயிற்சிகள், அனுசரிப்புகள், பிரசங்கங்கள் மற்றும் ‘பிரித்’ பராயணம் போன்றன இடம்பெற்றதுடன் ஏராளமான பக்தர்கள் இப் பூஜையில் கலந்துகொண்டனர்.
மேற்கு பாதுபாப்பு படைத்தலைமையகத்மதின் போதிராஜாராமய இராணுவ விகாரையின் ‘ஹோமாகம தர்ம ரஷ்மி’ பொசன் வலயத்தின் ஒரு பகுதியான ஹோமாகம பிரதேசத்தில் உள்ள பிட்டிபன சந்தியிலிருந்து கொடகம சந்தி வரைக்கும் பொசன் நிகழ்வுகள் இடம் பெற்றதுடன். இந்த வலயத்தில் பல வண்ணமயமான பொசன் கூடுகள் மேற்கு பாதுபாப்பு படைத்தலைமையகம் மற்றும் படையலகுகளில் பணியாற்றும் படையினரால் வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, பனாகொட இராணுவ வளாகத்தில் அமைந்துள்ள மேற்கு பாதுபாப்பு படைத்தலைமையகம் மற்றும் படையணி தலைமையங்களால் ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி வளாகத்தில் ‘அன்னதானம் வழங்கப்பட்டது. ஹோமாகம பிரதேசத்தில் பொசன் வலயத்தை காண வந்த பக்தர்களுக்கு இராணுவப் படையினர் சமையல் வசதிகளை வழங்கினர். சிவில் நிறுவனங்கள் அன்னதானத்திற்கான பொருட்களை வழங்கியிருந்தனர்.
மேலும், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவப் பங்கேற்புக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கியதுடன் இலங்கை தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிகேடி புஸ்ஸெல்ல . ஆர்எஸ்பீ மற்றும் அந்தந்தப் படையணிகளின் நிலைய தளபதிகள் ஏற்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து அந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.