Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd March 2023 21:41:49 Hours

ஹல்தும்முல்ல விகாரையில் 'தான' நிகழ்விற்கு மத்தியப் படையினர் உதவி

பண்டாரவளை ஹல்துமுல்ல ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையில் ஊர்வலம் மற்றும் புனித மண்டபத்தின் முதலாம் ஆண்டு நிறைவுத் திட்டத்திற்கு 60 சிப்பாய்களின் உதவியுடன் மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள் வண. கஹகொல்லே ஆனந்த தேரர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆதரவளித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) பித்தளையால் செய்யப்பட்ட 50 புத்தர் சிலைகள் மற்றும் 72 'அட்டபிரிகர' (பிக்குகளுக்காக எட்டு வகை தானங்கள்) ஏந்திய படையினர் பல கிராமங்கள் வழியாக அணிவகுத்த பின்னர் ஹல்துமுல்ல ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரைக்குச் சென்றனர்.

மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்கவும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டதுடன் இராணுவத்தினருக்கு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொடுத்து, மறைந்த இராணுவ வீரர்களின் ஆத்மசாந்திக்கான மத அனுஷ்டானங்களில் கலந்துகொண்டார்.