15th October 2023 22:22:30 Hours
ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் கோரிக்கைக்கு இணங்க 12 வது காலாட் படைப்பிரிவு வியாழக்கிழமை (ஒக்டோபர் 12) 'தர முகாமைத்துவம்' எனும் தொனிப்பொருளில் ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் செயலமர்வுக்கான விரிவுரை உதவியை வழங்கினர்.
அதன்படி, குடாஓயாவில் உள்ள கமாண்டோ படைப்பிரிவு பயிற்சிப் பாடசாலை பாராசூட் பயிற்சிப் பிரிவின் தலைமைப் பயிற்றுவிப்பாளரும், தலைமைத்துவப் பயிற்சி வகுப்பின் ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் பீ.எஸ். விதானகமகே அவர்கள் ஏற்பாட்டின் போது பார்வையாளர்களுக்கு ‘தொழில்முறை மேம்பாடு மற்றும் பொது உருவத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் விரிவுரையை நடத்தினார்.
விரிவுரையில் அடிப்படை சடங்குகள் மற்றும் நெறிமுறைகள், தொலைப்பேசியின் பயன்பாடு, சமூக நெறிமுறைகள் போன்றவை அடங்கிருந்தன. இந்த அமர்வில் 50 இற்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டதுடன் இறுதியில் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட உதவிகளை ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார். மேலும், குறுகிய அறிவிப்பில் தங்களின் கோரிக்கைக்கு விரைவாகப் பதிலளித்த இராணுவத் தளபதி மற்றும் 12 வது காலாட்படைப் பிரிவின் தளபதி ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.