30th April 2024 19:58:36 Hours
இலங்கையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாலைதீவு படையினர் தியத்தலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலையில் 10 ஏப்ரல் 2024 அன்று நடைபெற்ற நிகழ்வுடன் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர்.
03 அதிகாரிகள் மற்றும் 14 சிப்பாய்களை கொண்ட இந்த குழு 12 மார்ச் 2024 அன்று பயிற்சியை ஆரம்பித்து 10 ஏப்ரல் 2024 அன்று நிறைவு செய்தது. இந்த பயிற்சியின் போது டி56, ஜி3ஏ3 மற்றும் ஏஐஏடபிள்யூ ரைபிள்களில் சிறப்புப் பயிற்சியை பெற்றனர்.
இலங்கையில் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் ஹசன் அமீர் அவர்கள் 2024 ஏப்ரல் 08 ஆம் திகதி நடைபெற்றுவரும் பயிற்சியை பார்வையிட்டார்.
நிறைவு விழாவில் பிரதம அதிதியாக குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ பீ காரியவசம் அவர்கள் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார். அதேவேலை சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக தெரிவு செய்யப்பட்ட லான்ஸ் கோப்ரல் முகமட் நசீம் மற்றும் எழுத்துத் தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்றமைக்காக லான்ஸ் கோப்ரல் அலி ஜின்னா ஆகியோருக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
நிறைவு விழாவில் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சிப் பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்களும் பங்கேற்றனர்.