Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2024 07:58:34 Hours

வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கான மோட்டார் படகு பயிற்சி பாடநெறி நிறைவு

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 68 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு சிறப்பு அடிப்படை மோட்டார் படகு மற்றும் துடுப்பு படகு பயிற்சி பாடநெறி ஏற்பாடு செய்யப்பட்டது.

2024 ஆகஸ்ட் 5 முதல் 2024 ஆகஸ்ட் 13 வரை எம்பிலிப்பிட்டியவில் உள்ள இராணுவப் பொறியியல் பயிற்சி பாடசாலையில் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பாடத்திட்டமானது, பங்கேற்பாளர்களுக்கு அத்தியாவசியமான மோட்டார் படகு இயக்க திறன்களை வழங்குவதையும் குறிப்பாக வெள்ளச் சூழ்நிலைகளைக் கையாளவும், இயற்கை அனர்த்தங்களின் போது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.