18th August 2023 19:02:41 Hours
பொறியியல் சேவைகள் படையணி மற்றும் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேஎம்எஸ் குமார அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஓகஸ்ட் 10 கபுருபிட்டிய 12 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணிக்கு விஜயம் செய்தார்.
12 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேடபிள்யூஜீயூஎம் குணதிலக்க அவர்களால் மேஜர் ஜெனரல் கேஎம்எஸ் குமார அவர்கள் முகாம் வளாகத்திற்கு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய 12 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
12 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு மாடி அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்து அலுவலக வளாகத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்த படைத் தளபதியை அழைத்தார்.
தனது விஜயத்தின் போது அவர் இராணுவத்தினரை சந்தித்ததின் நினைவாக முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார்.
இந்த நிகழ்வில் பொறியியல் சேவைகள் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.