Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st January 2024 18:00:49 Hours

"வெற்றி நினைவிட்த்தில் 68 வது காலாட் படைப்பிரிவினரால் சிப்பாய்கள் தங்குமிடம் அபிவிருத்தி

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி புதுக்குடியிருப்பில் உள்ள வெற்றி நினைவிடத்தில் படையினருக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக புதிய விடுதிகள் நிர்மாணிக்கப்பட்டன. இத்திட்டம் 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 68 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிட பகுதிக்கு விஜயம் செய்து சேவையில் ஈடுபட்டுள்ள படையினருடன் கலந்துரையாடினர்.