Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2023 17:20:33 Hours

வெசாக்’ தினத்தை முன்னிட்டு யாழ். தலைமையகத்தில் ‘பலாக்காய் தானம்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎன்பிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகம் 'புத்த பூர்ணிமா' வெசாக் தினத்தில் மே 7 தனது பங்களிப்பை வழங்கியது.

சமய நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், தமிழ் சமூகம் மற்றும் படையினருக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதை இலக்காகக் கொண்ட நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், வண. மீகாஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் அவர்களால் தலைமையக வளாகத்தில் ஆற்றிய தர்ம சொற்பொழிவுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

யாழ். டி சந்தியில் அப் பகுதியில் வசிக்கும் மக்களுக்காக அவித்த பலாக்காய் தானமாக வழங்கப்பட்டதுடன், மே 5 - 7 ம் திகதி வரை 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையினரால் மரவள்ளிகிழங்கு தானம், 3 வது இலங்கை சமிக்ஞை படையினரால் கொண்டைக்கடலை தானமும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு முகாமின் முன்பும் பார்வையாளர்களை கவரும் வகையில் 'வெசாக்' கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அதற்கமைய 3 வது இலங்கை சமிக்ஞை படையணியினரால் மே 7 ம் திகதி மூலிகை பானம் மற்றும் ரொட்டியும் வழங்கப்பட்டது. மேலும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் நிர்வகிக்கப்படும் இராணுவப் பண்ணையிலும் அதே நாளில் மூலிகை பானம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.