Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th May 2023 19:10:11 Hours

வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கை பொறியியல் படையினர் முதியோர் இல்லத்திற்கு அன்பளிப்பு

இலங்கை பொறியியல் படையணியின் படையினர் வெசாக் தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (2) மத்தேகொட துசித முதியோர் இல்லத்தில் வசிக்கும் 26 முதியோர்களுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

சமூக நலன் சார்ந்த இத்திட்டத்தின் போது அத்தியாவசிய உணவு பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், மருந்துகள் மற்றும் உடைகள் என்பன முதியோருக்கு வழங்கப்பட்டது.

இத் திட்டமானது மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் முன்முயற்சியால், அனுசரனையாளர் திரு.பிரசாத் லொகுபாலசூரிய அவர்களின் நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய சம்பிரதாய தேநீர் விருந்துபசாரத்துடன் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை பொறியியல் படையணியின் கலிப்சோ இசைக் குழுவினரின் இசையில், முதியவர்கள் மகிழ்விக்கப்பட்துடன் இந்நிகழ்வில் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.