08th May 2023 22:15:30 Hours
வெசாக் தினத்தை முன்னிட்டு, கிரிசுட்டான் கிராமத்தில் 25 குடும்பங்களின் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு 65 வது காலாட் படைபிரிவின் 653 வது காலாட் பிரிகேட் படையினர் வெசாக் தினத்தில் விசேட மதிய உணவு பொதிகள் மற்றும் தென்னம் பிள்ளைகளை வழங்கினர்.
65 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் இஎடிபீ எதிரிசிங்க பீஎஸ்சீ அவர்கள் 653 வது காலாட் பிரிகேடிட்கு வழங்கிய பணிப்புரைக்கமைய நிலவும் பொருளாதார நிலைமைகள் காரணமாக இக் குடும்பங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
653 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎன்சி சேரசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 25 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 125 தென்னம் பிள்ளைகள் மற்றும் 50 மதிய உணவுப் பொதிகளையும் விநியோகித்தார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்துகொண்டனர்