07th May 2023 19:10:02 Hours
'வெசாக்' போயா தினத்தை முன்னிட்டு, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 22 வது காலாட் படைப்பிரிவின் 221 வது பிரிகேட் படையினரால் திருகோணமலை பிரதேசத்தில் வசிக்கும் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 50 குடும்பங்களுக்கு மே 5 ம் திகதி திருகோணமலை கும்புறுப்பிட்டி வித்யாலோக்க விகாரையில் உலர் உணவு பொதிகளை வழங்கினர்.
221 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏகே பீரிஸ் ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்விற்கு கொழும்பில் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் இத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இவ் உலர் உணவு பொதிகளில் ரூபா 6000/= பெறுமதியான அரிசி, பருப்பு, நெத்திலி, மசாலா, ஊட்டச்சத்துக்கள் மற்றும் தானியங்கள் ஆகியவை உள்ளடங்கப்பட்டிருந்தன.
இத் திட்டத்திற்கு சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் ஆதரவளித்தனர்.