Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2023 23:06:27 Hours

விஷேட படையணியின் படையினருக்கு வருடாந்த விளையாட்டுப் போட்டி

விஷேட படையணியின் வருடாந்தப் படையலகுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியானது 23 மார்ச் 2023 அன்று வவுனியா மூன்றுமுறிப்பு 3 வது விஷேட படையணித் தலைமையகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் நிறைவு பெற்றது.

படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யப்பா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், படையினரின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை நோக்கிச் செயற்படும் போது, அணியில் திறமையாகப் பணியாற்றுவதற்கு, மாற்றத்தக்க திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகள் முக்கியமாக கிரிக்கெட், கரப்பந்து மற்றும் காற்பந்து ஆகிய மூன்று போட்டிகளைக் கொண்டிருந்தன. நடைபெற்ற கரப்பந்து மற்றும் கிரிகெட் போட்டியில் 3 வது விஷேட படையணியும், காற்பந்தாட்டப் போட்டியில் 4 வது விஷேட படையணியும் வெற்றி பெற்றன.

நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ரணசிங்க அவர்கள் கலந்து கொண்டதுடன், விஷேட படையணியின் நிலையத் தளபதி - விஷேட படையணி பிரிகேட் தளபதி, கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.