16th February 2023 19:46:32 Hours
விஷேட படையணி தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான வழங்கல் தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கு பெப்ரவரி 8-10 திகதிகளில் நாவுல விஷேட படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இப் கருத்தரங்கில் தற்போதுள்ள இராணுவ நடைமுறைகள் மற்றும் வழங்கல் குறித்த விதிமுறைகள் பற்றிய அறிவை விரிவுபடுத்தும் நோக்கில் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜெயசேகர அவர்களால் இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மற்றும் விஷேட படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் செனரத் யாப்பாவின் வேண்டுகேளுக்கிணங்க நடாத்தப்பட்டது.
இக் கருத்தரங்கில் விஷேட படையணி தலைமையக நிலைய தளபதி, பிரதி நிலைய தளபதி, கட்டளை அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் விடுதி அதிகாரிகள் என 50 மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.