17th May 2023 20:54:56 Hours
இராணுவ விளையாட்டுக் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் எண்ணக்கருக்கு அமைவாக விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு "விளையாட்டு உளவியல்" என்ற தலைப்பில் தொடர்ச்சியான விரிவுரைகள் மேற் கொள்ளப்பட்டன. இராணுவ விளையாட்டு குழுக்களின் இராணுவ வீர வீராங்கனைகளின் விளையாட்டு திறன்கள் செயல்திறன், மன உறுதி மற்றும் உளவியல் திறனை மேம்படுத்துவதற்காகவ இவ் விரிவுரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை (ஏப்ரல் 03) அமர்வுகள் நடத்தப்பட்டதுடன் நீச்சல், குத்துச்சண்டை, டேக்வாண்டோ, கயிறு இழுத்தல், தடைதாண்டல் மற்றும் தற்காப்பு உள்ளிட்ட 6 விளையாட்டு வீரர்கள் இத் திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். விரிவுரைகள் விளையாட்டு பணிப்பகத்தின் உளவியலாளர் கெப்டன் எஸ் ரூபஸ்ரீ நடத்தினார். விளையாட்டுக் குழுக்களின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் அமர்வுகளில் பங்கேற்றனர்.