17th June 2023 20:34:55 Hours
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்புப் பிரிவானது சர்வதேச யோகாசன தினத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் முப்படை வீரர்களுக்காக ஜூன் 12 முதல் 14 வரை மூன்று நாள் யோகாசன பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் உட்பட ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கிய சுமார் 750 இராணுவத்தினர் இந்த செயலமர்வில் இணைந்தனர். இந்திய கலாசார மையம் மற்றும் சுவாமி விவேகானந்தர் யோகாஸ்ரமய பயிற்றுனர்களால் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விளையாட்டுப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி இந்த திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற பிரதான நிகழ்வில் இந்திய கலாசார நிலையத்தின் தலைவர் பேராசிரியர் அங்குரன் தத்தா கலந்துக்கொண்டதுடன் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.