Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2023 19:18:42 Hours

விளையாட்டு உடலியல் மற்றும் உளவியல் குறித்து ஷ்கோஸ் வீரர்கள் கற்கை

விளையாட்டு பணிப்பகம் விளையாட்டு உடலியல் மற்றும் விளையாட்டு உளவியல் அடிப்படையில் இராணுவ விளையாட்டு வீரர்கள் சர்வதேச பதக்கங்களை பெறுவதற்கும் விளையாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்கும் விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி புதன்கிழமை (ஜூலை 26) மத்தேகொட பொறியியல் படையணி தலைமையகத்தில் மேலும் ஒரு அமர்வை நடாத்தியது.

இலங்கை இராணுவ ஷ்கோஸ் கழக செயலாளர் கேணல் பிஏஎம்பீ பாலசூரிய ஆர்எஸ்பீ நிகழ்வை ஒருங்கிணைத்ததுடன் பொறியியல் படையணி ஷ்கோஸ் வீரர்கள் உட்பட 21 ஷ்கோஸ் வீரர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவ விளையாட்டு உளவியலாளர் இராணுவ பொது சேவை படையணியின் கெப்டன் ஓடிஎஸ்கே ரூபஸ்ரீ அவர்கள் தலைமையக ஷ்கோஸ் போட்டிக்கு முன்னதாக ஊக்கமளிப்பு விரிவுரையும் விளையாட்டு மருத்துவ பிரிவில் விளையாட்டு உடலியல் மருத்துவர் இராணுவ பொது சேவை படையணியின் மேஜர் டப்ளியுகேபீஎஸ் பண்டார அவர்களால் "போட்டிக் காலத்தில் விளையாட்டு காயங்களைத் தடுத்தல்" என்ற தலைப்பிலும் விரிவுரைகள் நடத்தப்பட்டன.