27th October 2024 13:52:31 Hours
14 வது காலாட் படைப்பிரிவு தளபதியும், விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் தலைமையில், 2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான அதிகாரிகளின் பயிற்சி நாள் 25 ஒக்டோபர் 2024 அன்று விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
படையணி விளையாட்டு மைதானத்தில் காலை உடல் பயிற்சியுடன் அன்றைய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. முகாம் வளாகத்திற்குள் 200 தென்னம் பிள்ளைகள் நடும் நிகழ்ச்சியுடன் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரகள் கலந்து கொண்டனர். திருமதி. இனுஷா நில்மினி ஹெட்டியாராச்சிகே அவர்களால் காலத்தின் தேவைக்கு ஏற்ப முக்கிய விடயமாக "பணியிட அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு" என்ற தலைப்பில் விரிவுரை நடாத்தப்பட்டது. பின்னர், குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பிரதான பொலிஸ் பரிசோதகரான சிஐ சன்னக்க கொப்பேவல அவர்களால் "மனித உரிமைகள் சட்ட அமுலாக்கம் மற்றும் நெறிமுறைகள்" என்ற தலைப்பில் ஊடாடும் மற்றும் தகவல் தரும் விரிவுரை நடாத்தப்பட்டது.
படையணியின் அனைத்து தரம் 1 பணிநிலை அதிகாரிகளின் தலைமையில் இடம்பெற்ற ஊடாடும் குழு கலந்துரையாடல், அனைத்து அதிகாரிகளுக்கும் படையணி விடயங்கள் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியதுடன், விஜயபாகு காலாட் படையணியின் முன்னேற்றத்திற்கான தமது ஆலோசனைகளை வழங்கவும் வெவ்வேறு கோணங்களில் முன்வைக்கவும் சநதர்ப்பம் வழங்கப்பட்டது. மேலும் ஊக்கமளிக்கும் வகையில், இந்தியாவின் முதல் பீல்ட் மார்ஷலான சாம் மனேக்ஷாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் "சாம் பகதூர்" திரைப்படம் ஆர்ச்சர்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு மாலை நேர பொழுதுபோக்கு நிகழ்வின் போது தங்களுக்கு, விருப்பமான விளையாட்டுகளை விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டன.
அதிகாரிகளின் பயிற்சி தினத்தை முன்னிட்டு, பங்கேற்ற அதிகாரிகள் உட்பட விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் "த சல்யூட்" பல்லூடக மண்டபத்தில் டைனர்ஸ் கிளப் அமர்வு நடைபெற்றது. இரவு விருந்தின் பேச்சாளரான கேணல் எம்.பி.பி.என் ஹேரத் ஆர்எஸ்பீ அவர்கள் “மூன்றாவது லென்ஸ் மூலம் தலைமைத்துவத்தின் ஆவி” என்ற தலைப்பில் தகவல் மற்றும் சிந்தனையைத் தூண்டும் விரிவுரையை நடாத்தினார். அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்தினர் மற்றும் விருந்தினர் பேச்சாளருடன் ஊடாடும் அமர்வை நடாத்தினர். கலாசார மற்றும் கவர்ச்சியான இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. அதிகாரிகள் பல்வேறு திறமைகளை கண்டுகளிக்கவும், படைப்பாற்றல் மற்றும் கலாசார பாரம்பரியத்தை துடிப்பான சூழ்நிலையில் கொண்டாடவும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்வில் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி, படையணியின் கவுன்சில் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.