Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2023 17:04:16 Hours

விசேட படையணியின் கோப்ரல் எழுதிய ‘விஷ்மித ஹெல ஓசுவ’ நூல் இராணுவத் தளபதிக்கு

மாதுரு ஓயா விசேட படையணி பயிற்சி பாடசாலை நிர்வகிக்கும் மூலிகைத் தோட்டத்தில் பணிபுரியும் 3 வது விசேட படையணியின் கோப்ரல் எம்டிஜஎஸ் பண்டார அவர்களினால் எழுதப்பட்ட மருத்துவ மூலிகைகள் தொடர்பான 'விஷ்மித ஹெல ஒசுவ' (அற்புதமான சிங்கள மூலிகை மருத்துவம்) என்ற சிறு நூலின் முதல் பிரதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களிடம் அதன் ஆசிரியர், பிரதி பதவி நிலை பிரதானியும் விசேட படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் முன்னிலையில் திங்கட்கிழமை (மே 29) காலை இராணுவத் தலைமையகத்தில் வழங்கப்பட்டது.

இந் நூலில் சுமார் 100 வகையான மருத்துவ தாவரங்கள், விஞ்ஞான மற்றும் பொதுவான தகவல்கள், அந்த தாவரங்களின் 'ஆயுர்வேத' குணங்கள் மற்றும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த அந்த தாவரங்களின் பயன்பாடு போன்றவற்றை ஆவணப்படுத்தி விவரிக்கிறது. இந் நூலின் ஆசிரியர், மரணத்தில் தப்புதல் மற்றும் விசேட படையணி பயிற்சி பாடசாலையின் போர் கண்காணிப்பு பாடநெறியின் பயிற்றுவிப்பாளர் ஆவர். 2018-2021 ஆம் ஆண்டு தொடக்கம் விசேட படையணி பயிற்சி பாடசாலையின் பல பாடநெறிகளின் பயிற்றுவிப்பாளராக குறிப்பிட்ட பாடத்தில் அவரது விரிவுரைகளை மேற்கொள்கின்றார்.

அந்த மூலிகைத் தாவரங்களை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதல்களையும், சில இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதால், அவற்றை மீண்டும் நடுவதன் முக்கியத்துவத்தையும் சிறு புத்தகம் தெளிவுப்படுத்துகின்றது.

நூலின் உள்ளடக்கங்களைக் கண்டு கவரப்பட்ட இராணுவத் தளபதி, ஆசிரியருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அதேவேளை அவருக்கு விசேட நினைவுச் சின்னத்தையும் வழங்கிப் பாராட்டினார்.

இந்த நூல் பிரதி பதவி நிலை பிரதானியும் விசேட படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ , விசேட படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஆர்பீஎஸ் பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ , விசேட படையணி தலைமையகம் மற்றும் விசேட படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி டிஎஸ் ஹொரவலவித்தான டபிள்யூடபிள்யூவி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் எழுதப்பட்டது