Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2024 18:36:44 Hours

விசேட படையணி போர் நீச்சல் பயிற்சி பாடசாலையில் காஸ்ட் மாஸ்டர் பயிற்சி எண். 02 நிறைவு

காஸ்ட் மாஸ்டர் பயிற்சி எண். 02 ஆனது 6 ஜூலை 2024 தொடக்கம் 2024 மே 15 வரை முல்லைத்தீவு நாயாறு, விசேட படையணி போர் நீச்சல் பயிற்சி பாடசாலையில வெற்றிகரமாக இடம்பெற்றது. கொமாண்டோ படையணி மற்றும் விசேட படையணியை பிரதிநிதித்துவபடுத்தி 10 மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இந்த பாடநெறியில் கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த உதவி, மனிதாபிமான உதவி மற்றும் சமச்சீரற்ற போரில் தேவையான பாதுகாப்பு தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளின் பயன்பாடு ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது.

விசேட படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விசேட படையணி போர் நீச்சல் பயிற்சி பாடசாலையின் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களால் பாடநெறி நடத்தப்பட்டது.