06th June 2024 14:53:47 Hours
விசேட படையணியின் படைத் தளபதியும் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டலில் விசேட படை பிரிகேட் தளபதி கேணல் டிஎஸ் ஹொரவலவிதான டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் திறமையான முய்தாய்போர் தற்காப்பு பாடநெறி சமீபத்தில் நிறைவடைந்தது.
இப் பயிற்சி 2024 மே 13 முதல் ஜூன் 03 வரை 3 வது விசேட படையணியில் நடைபெற்றது. இராணுவ முய்தாய் குழுவின் உபத் தலைவர் கேணல் பீபீசீ பெரேரா பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய ஏழு திறமையான பயிற்றுவிப்பாளர்களின் அறிவுறுத்தலின் கீழ் மொத்தம் 44 மாணவர்கள் பாடநெறியில் கலந்து கொண்டனர். போர் தற்காப்பு திறன்களை மேம்படுத்துதல், பங்கேற்பாளர்களுக்கு தேவையான திறன்கள் மற்றும் நிஜ உலக சூழ்நிலைகளுக்கான உத்திகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் தொடர்பாக இப்பாடநெறியில் கற்பிக்கப்பட்டது.