05th July 2023 20:03:24 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேட் மற்றும் 2 வது (தொ) கெமுனு ஹேவா ஆகியவற்றின் படையினரின் முயற்சியில் காலி 'சம்போதி' இல்லத்தின் விசேட தேவையுடைய 56 பிள்ளைகளுக்கு அண்மையில் மதிய உணவு வழங்கப்பட்டது.
சிவில்-இராணுவ ஒத்துழைப்பு திட்டமாக கொண்டு அனைத்து படையினரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் மகிழ்ச்சியை நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் ஆசீர்வாதத்துடன் 61 காலாட் படைபிரிவு, 613 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 2 (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரால் மேற்பார்வையிடப்பட்டன.
மதிய உணவிற்கு பின்னர் படையினர் அந்தக் பிள்ளைகளை மகிழ்வித்து அவர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கினர். இராணுவ இசைக்கலைஞர்களின் இசையினால் பிள்ளைகள் பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.
இந் நிகழ்வில் 613 வது காலாட் பிரிகேட் தளபதி, பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ‘சம்போதி’ இல்லத்தின் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.