22nd August 2023 22:12:45 Hours
வான் தாக்குதல் பாடநெறி இல-26 நிறைவின் விடுகை அணிவகுப்பு நிகவெவ எயர் மொபைல் பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முதலாம் படையின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்துகொண்டார்.
5 அதிகாரிகள் மற்றும் 127 சிப்பாய்கள் மூன்று மாத காலப் பாடநெறியில் கலந்து கொண்டதுடன், பாடநெறியின் சிறந்த மாணவருக்கான சான்றிதழை 1 வது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் கேஜிஜே கருணாரத்ன அவர்களும், சிறந்த உடல் தகுதியுள்ள மாணவருக்கான கிண்ணத்தை லான்ஸ் கோப்ரல் ஏஎம்ஜேஎஸ் அத்தநாயக்க அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
53 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, 53 வது காலாட்படை பிரிவின் பிரதித் தளபதி பிரிகேடியர் ஆர்டபிள்யூகே ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிஷே்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் விடுகை அணிவகுப்பை பார்வையிட்டனர்.