04th July 2024 16:34:36 Hours
வவுனியா கோட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டி 01 ஜூலை 2024 அன்று வவுனியா தமிழ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. வவுனியா வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் 56 வது காலாட் படைபிரிவின் படையினரின் உதவியுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா வலயக் கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் போட்டியை ஒருங்கிணைத்ததோடு, மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், குழுப்பணியை வளர்ப்பது, ஒழுக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. இப்போட்டியில் 33 தமிழ்ப் பாடசாலைகள் மற்றும் 9 முஸ்லிம் பாடசாலைகளை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் பிரதம விருந்தினராக இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.