Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th June 2023 22:37:00 Hours

வவுனியா இரத்த வங்கி அதிகாரிகளால் இராணுவ இரத்த நன்கொடையாளர்களுக்கு பராட்டு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் 136 இற்கும் மேற்பட்ட படையினர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கும் நோக்குடன் சனிக்கிழமை (24) வன்னி கள வைத்தியசாலையில் இரத்ததானம் செய்தனர்.

வவுனியா இரத்த வங்கியின் தேவையின் மனிதாபிமானத் தன்மையைக் கருத்தில் கொண்டு வன்னியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தமது இரத்தத்தை உடனடியாக வழங்கினர். வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் மருத்துவப் பணியாளர்கள் இராணுவத்தினரைப் பாராட்டியதுடன், இரத்த வங்கியில் மிகவும் தேவையான இரத்தம் இல்லாததால் வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.

இரத்த தானம் வழங்கும் நிகழ்வின் போது 37 தடவைகள் இரத்ததானம் செய்த இலங்கை சிங்க படையணியின் அதிகாரவானணயற்ற அதிகாரி டிஎம்டிஆர் பிரியங்க மற்றும் 45 தடவை இரத்த தானம் செய்த விஜயபாகு காலாட் படையணி பணிநிலை சார்ஜன் பிடிஎல்பீ திலகசிறி ஆகியோர் இரத்த வங்கி அதிகாரிகளிடமிருந்து பாராட்டுச் சின்னங்களையும் சான்றிதழ்களையும் பெற்றனர்.

வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சி.டி. ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் சரியான நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி அனைத்து நன்கொடையாளர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.