12th October 2024 15:05:26 Hours
212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.எம்.சீ ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 05 ஒக்டோபர் 2024 அன்று அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திரா தேசிய கல்லூரியில் நடைபெற்ற மாணவத் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் போது, 212 வது காலாட் பிரிகேட் தளபதி புதிதாக நியமிக்கப்பட்ட 217 மாணவ தலைவர்களுக்கு சின்னங்களை அணிவித்ததுடன், அவர் தனது உரையில், மாணவர்களுக்கு தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் தேசபக்தியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.