Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2023 18:35:48 Hours

வயம்ப 6 வது பசுமை முன்னோடிகள் பட்டறைக்கு இராணுவ உதவி

விவசாய அறிவு மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான 6வது செயலமர்வு, குருநாகல் 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர்களுடன் இணைந்து வயம்ப பயிற்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “பசுமை முன்னோடிகள்” என்ற தொனிப்பொருளில் வாரியபொலவில் உள்ள வயம்ப பயிற்சி நிறுவன வளாகத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்றது.

பசுமை விவசாயம் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தும் பயிற்சி திட்டத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ நிஸ்ஸங்க வித்தியாலயம், வித்யாலோக வித்தியாலயம் மற்றும் உஹுமிய்யா கல்லூரியைச் சேர்ந்த 70 மாணவர்கள் இந்த திட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சியில் படையினரால் பங்கேற்பாளர்களுக்கு உடற் பயிற்சி, மாணவர்களுக்கு அவசியமான தத்துவார்த்த மற்றும் நடைமுறை குழு செயல்பாடுகள் உள்ளடக்கிய தலைமைத்துவத்தை வழங்கியதுடன், உணவு பாதுகாப்பு, வானிலை மாற்றங்கள், உரமிடுதல், நீர்ப்பாசனம், சூரிய ஒளி காரணிகள், உலகளாவிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்றவற்றையும் கற்பிக்கப்பட்டன.

இப் பயிற்சி மேற்குப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், 143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎம்எப் கிச்சிலன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேஏஎஸ்பீ குமார ஆகியோரின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டது.

அண்மையில் 2023 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி தம்பதெனிய மகாவித்தியாலயம் மற்றும் நிக்கவெரட்டிய ஜயந்தி நவோதய மத்திய கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளினதும் 70 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இதே செயலமர்வு நடத்தப்பட்டது.