22nd August 2023 22:02:33 Hours
அநுராதபுரம் 21 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் நீச்சல் தடாகத்தை 21 வது காலாட் படைப்பிரிவு படையினர் புனரமைத்து, பாதுகாப்பு படையினர், பொலிஸார், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பாவனைக்காக புதன்கிழமை (ஓகஸ்ட் 16) அன்று திறந்து வைத்தனர்.
தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக நீச்சல் தடாகம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீடபிள்யூடி நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 21 வது காலாட் படைப்பிரிவின் படையினர் புனரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 62 இராணுவ வீரர்களுடன் 2023 செப்டெம்பர் 04 ஆம் திகதி இராணுவ வீரர்களுக்கான நீச்சல் பயிற்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.