13th June 2024 16:48:34 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 16,000 கறுவாப்பட்டை கன்றுகள் நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முயற்சியானது பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் அதே வேளையில் நிலையான வருமான ஆதாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வு 2024 ஜூன் 11 அன்று வவுனியா சலலிஹினிகம மற்றும் நாமல்கமவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி கலந்து சிறப்பித்தார்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக பிரதேசத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கருவப்பட்டை கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாயிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
21 வது மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி, 211 மற்றும் 563 வது காலாட் பிரிகேட் தளபதிகள், 11 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள், வவுனியா தெற்கு கறுவாத் தோட்ட சங்க தலைவர், சிப்பாய்கள் மற்றும் நாமல்கம மற்றும் சலலிஹினிகம பிரதேசங்களைச் சேர்ந்த பயனாளிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.