21st February 2025 10:31:47 Hours
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ.டப்ளியூ.எம்.பீ.டப்ளியூ.டப்ளியூ.பி.ஆர் பாலம்கும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 212 வது மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், தூய இலங்கை திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தில் அமைந்துள்ள பாடசலைகளில் தூய்மையக்கல் திட்டத்தை படையினர் நடத்தினர்.
கல்கிரியாகம மத்திய கல்லூரி, கலேன்பிந்துனுவெவ ஆரம்ப மாதிரி பாடசாலை, புதுகெஹின்ன பாடசாலை, எப்பாவல சுமங்கல மகா வித்தியாலயம், கெலே திவுல்வெவ பாடசாலை, வெலிஓயா கல்யாணிபுர மகா வித்தியாலயம், நெடுங்கேணி மகா வித்தியாலயம் மற்றும் ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் படையினர் தூய்மையக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், 5 வது (தொ) இயந்திரவியற் காலாட் படையணி படையினர் 2025 பெப்ரவரி 17 அன்று கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் ஆரம்ப பாடசாலையில் தூய்மையாக்கும் திட்டத்தினை நடத்தினர்.
அதற்கமைய, 561 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 561 வது காலாட் பிரிகேட் படையினர், 2025 பெப்ரவரி 25 அன்று, பாலிநகரில் உள்ள பாலிநகர் மகா வித்தியாலயத்தில் ஒரு தூய்மையாக்கல் பணியை மேற்கொண்டனர். இந்த முயற்சியில் வகுப்பறைகள் மற்றும் பாடசாலை சுற்றுப்புறங்களில் புல் வெட்டுதல் மற்றும் குப்பைகளை அகற்றுதல் ஆகியவை அடங்கும்.
மேலும், 211 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 5 வது (தொ) கஜபா படையணி படையினர், பண்டார உல்பத வித்தியாலயப் பகுதியில் மரக்கிளைகளை வெட்டி தூய்மையக்கல் பணியை மேற்கொண்டனர்.
அதேவேளை, 10 வது இலங்கை சிங்க படையணி படையினர் 2025 பெப்ரவரி 27 அன்று மு/கொக்கிலாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மைதானத்தை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு உதவியதுடன் 10 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும், 212 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 பெப்ரவரி 27 அன்று பல பாடசாலைகளில் தூய்மையக்கல் மற்றும் சிறிய திருத்த பணிகளை மேற்கொண்டனர். இந்த முயற்சியால் பயனடைந்த பாடசாலைகளில் மரதன்கடவலவில் உள்ள ஸ்ரீ ராகுல மகா வித்தியாலயம், கல்லஞ்சியாகம முஸ்லிம் பாடசாலை, மடாட்டுகம ஸ்ரீ ரேவத மத்திய கல்லூரி, புல்னேவ இஹல புல்னேவ மகா வித்தியாலயம் மற்றும் கலங்குட்டி மாவத்தேகம வித்தியாலயம் ஆகியவை அடங்கும்.
அத்துடன், 6 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 மார்ச் 10 ஆம் திகதி உடையார்கட்டிலுள்ள முல்/மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் அப்பிரதேச பொதுமக்களின் பங்கேற்புடன் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
அதே போன்று, 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2025 மார்ச் 10 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் (கிழக்கு) பிரதேசத்தில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிரமதான திட்டத்தை நடாத்தினர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றொர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.