Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st December 2024 11:39:41 Hours

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் முத்துஐயன்கட்டு மற்றும் மாங்குளத்தில் நன்கொடை நிகழ்வு

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 592 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 5 வது (தொ) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி படையினருடன் இணைந்து 29 நவம்பர் 2024 அன்று 5 வது (தொ) இலங்கை சிங்க படையணியில் முதியன்கட்டு மற்றும் மாங்குளம் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பேட்டரி மற்றும் பல்புகளுடன் கூடிய சூரிய மின் கலங்களை விநியோகித்தனர்.

இந்த முயற்சியால் 40 குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் பயனடைந்தன. மேலும், முத்துஐயன்கட்டு தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஒருவருக்கும் ஒரு ஜோடி தடகள காலணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.